விராட் கோஹ்லியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்!
பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் விராட் கோஹ்லியின் சாதனையை பாகிஸ்தானின் பாபர் அசாம் முறியடித்துள்ளார்.
பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் 40 பந்துகளை எதிர்கொண்டு 55 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ஓட்டங்களை அதிவேகமாக கடந்த ஆசிய வீரர் என்ற விராட் கோஹ்லியின் சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார்.
விராட் கோஹ்லி இந்த மைல்கல்லை 261ஆவது இன்னிங்சில் எட்டியிருந்த நிலையில், பாபர் அசாம் 251ஆவது இன்னிங்சிலேயே இந்த மைல் கல்லை எட்டி சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.