Breaking News

உறுதியானதா சித்தார்த் - அதிதி ராவ் காதல்..? வைரலாகும் பதிவு..

 


நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். அவர் சமீபத்தில், தான் திரைத்துறையை விட்டு விலக இருப்பதாகவும் இனி படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டு தொழிலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியிருந்தார். 

இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்தார்த் - அதிதி ராவ் சில தினங்களாக நடிகை அதிதிராவ், சித்தார்த்துக்கும் காதல் என்று கிசுகிசு பரவி வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். 

இது தொடர்பான புகைப்படங்களும் வைரலானது. இந்நிலையில், அதிதிராவ் பிறந்த நாளையொட்டி அவருக்கு சித்தார்த் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதிதி ராவ்- சித்தார்த் அந்த பதிவில், "இதய இளவரசிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்'' என்று குறிப்பிட்டு உள்ளார். 

அதோடு தனது நெஞ்சில் அதிதிராவ் சாய்ந்தபடி இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் இருவரின் காதல் உறுதியானதாக பதிவிட்டு வருகின்றனர். சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.