Breaking News

மாவின் விலை குறைந்தாலும் பாணின் விலை குறையாது !

 


இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமைமாவின் விலை 290 ரூபாயாக குறைத்தாலும் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

இரு நிறுவனங்களும் கோதுமை மாவின் விலையை 250 ரூபாயாக குறைத்தால் மாத்திரமே தம்மால் பாண் உள்ளிட்ட பொருட்களின் விலைகளை குறைக்க முடியும் என இச்சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.

இந்த நாட்டிலுள்ள இரண்டு மாவு நிறுவனங்களும் இன்னமும் கோதுமை மாவை கிலோ ஒன்றுக்கு 310 முதல் 280 ரூபாய் வரை விற்பனை செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாவு குறைக்கப்பட்டுள்ளது, ஆனால் சந்தையில் மாவின் விலை இன்னும் கிலோவுக்கு 350 ரூபாயாக உள்ளது என்றும் அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.