சீமெந்தின் விலை குறைப்பு!
INSEE Sanstha மற்றும் INSEE Mahaweli Marine Plus ஆகிய 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலையை 100 ரூபாவால் குறைக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளன.
கட்டுமானத் துறைக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று (04) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.