இதை ஹரிஷ் கல்யாணுக்கு சமர்பணம் செய்கிறேன் - அசோக் செல்வன் பதிவு!
அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்து வரும் படம் 'நித்தம் ஒரு வானம்'. இதில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
நித்தம் ஒரு வானம் வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் மலையாளத்தில் 'ஆகாசம்' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் மற்றும் டிரைலர் அனைவரையும் கவர்ந்தது. நித்தம் ஒரு வானம் இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள உனக்கென நான் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
இதனை நடிகர் அசோக் செல்வன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இப்பாடலை என் அன்பு நண்பன் ஹரிஷ் கல்யாணுக்கு சமர்பணம் செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 'நித்தம் ஒரு வானம்' திரைப்படத்தில் அசோக் செல்வன் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.