ஜெனீவா பிரேரணையை நிராகரிப்பதாக இலங்கை தெரிவிப்பு!
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய பிரேரணையை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அந்த அமர்வில் உரையாற்றிய அவர், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இந்த பிரேரணை இலங்கையின் அனுமதியோ அல்லது ஆலோசனையோ இன்றி முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது இலங்கைக்கு பாதகமான பிரேரணை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அங்கு கருத்து வெளியிட்ட சீன பிரதிநிதி, மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 37 நாடுகளின் ஆதரவுடன் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய பிரேரணை தொடர்பான விவாதம் ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன், பாகிஸ்தான், பிரேசில் போன்ற பல நாடுகள் இந்த முன்மொழிவுகள் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன.