கொய்யா பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் என்ன..?
கொய்யா பழத்தில் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்துகள் நிறைந்திருப்பதால் உடல் எடை அதிகரிக்காது. உடலுக்குத் தேவையான பலமும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
கொய்யாவில் தான் அதிக வைட்டமின் சி உள்ளது. நார்ச்சத்து அதிகம் கொண்ட கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ போன்ற சத்துக்களுடன் போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் உள்ளன. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு எளிய தீர்வை தருகிறது.
கொய்யா ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கொய்யா பழத்தை சாப்பிடுவதன் மூலம் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுவடையும்.
பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு மிகுந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என சொல்வார்கள். ஆனால், கொய்யா பழத்தைச் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம். டைப்-2 நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கும் கொய்யாப்பழம் உதவுகிறது.
கொய்யா பழத்தில் அதிகளவு சோடியம் மற்றும் பொட்டாசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது அருமருந்தாகும்.
தினம் ஒரு கொய்யா பழத்தைச் சாப்பிட்டு வந்தால் வைட்டமின் சி குறைபாட்டைச் சரிசெய்ய முடியும். உடலின் சக்தி அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும். தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.