Breaking News

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாடகி சின்மயி.. வைரலாகும் புகைப்படம்.

 


தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார். 

இவர் 2014-ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார். சின்மயி இரட்டை குழந்தை சின்மயி, ராகுல் ரவீந்திரன் தம்பதியினருக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகியுள்ளதை அடுத்து அண்மையில்  ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தை பிறந்தது. 

இவர்களுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைத்துள்ளதாக சின்மயி தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் தெரிவித்திருந்தார். சின்மயி சின்மயி கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எதையும் பதிவிடவில்லை என்பதால் அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றார் என்ற வதந்தி பரவி வந்தது.

 இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் தனது இணைய பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தன் இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.