புடலங்காயில் உள்ள சத்துக்களும் அதன் நன்மைகளும் !!
புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு ஆகியவை நிறைந்திருக்கின்றன.
புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட்டால் நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள், புடலங்காயை எந்த வகையிலாவது உணவில் சேர்த்துகொண்டால், அனைத்து வகையான சத்துகளும் அவர்களுக்கு கிடைக்கும்.
புடலங்காய் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. புடலங்காய் இலைச் சாற்றை சிறிது எடுத்து நீருடன் கொத்தமல்லியையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை, தினமும் மூன்று வேளை குடித்து வர மஞ்சள் காமாலை வராது. காய்ச்சலையும் குணபடுத்தும்.
புடலங்காயில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. புடலங்காயில் தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் அதிக அளவு இருப்பதால் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கும் தன்மை கொண்டது. தலையில் உள்ள பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு.