Breaking News

கோதுமை மாவின் விலை உயர்வால் பாணின் விலை 10 ரூபாயினால் அதிகரிப்பு!

 

அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சமூக பாதுகா
ப்பு வரி காரணமாக இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மாவின் விலையை 13 ரூபாயினால் அதிகரித்துள்ளன.

இதனால் எதிர்காலத்தில் பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கோதுமை மாவின் விலை 250 ரூபாயாக குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.