உலக கிண்ண போட்டிகளில் புதிய சாதனை!
நடைபெறும் உலகக் கிண்ண போட்டிகளில் தென்னாபிரிக்க அணி புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளது.
தென்னாபிரிக்க அணியின் Quinton de Kock மற்றும் Rilee Rossouw ஆகிய இருவரும் இணைந்து 168 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றே இந்த புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை எடுத்துள்ளது.
தென்னாபிரிக்க அணி சார்பாக Quinton de Kock 63 ஓட்டங்களையும் Rilee Rossouw 109 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.