Breaking News

லங்கா IOC யின் பெற்றோல் விலையும் குறைப்பு!

 இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை குறைப்பிற்கு ஏற்ப லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் தமது பெற்றோல் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.

லங்கா ஐஓசி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பெற்றோல் 92 இன் விலை லீற்றருக்கு 40 ரூபாவும், பெற்றோல் 95 இன் விலை லீற்றருக்கு 30 ரூபாவும் குறைக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகியவற்றின் 92 ரக பெற்றோலின் புதிய விலை 410 ரூபாவாகவும், 95 ரக பெற்றோலின் புதிய விலை 510 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏனைய எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.