இலங்கையின் முதலாவது புகையிரத நூதனக் கிராமம்!
இலங்கையின் முதலாவது புகையிரத நூதனக் கிராமமாக புகையிரத உபகலாசாரத்தின் புராதன அனுபவத்தை வழங்குவதற்காக, மருதானை டெக்னிகல் சந்தியில் அமைந்துள்ள புகையிரத நூதனசாலை மாற்றப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஜே. ஏ. டி. ஆர். புஷ்பகுமார தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு போன்ற சன நெரிசலான பிரதேசமொன்றில் நூதனசாலை பிரதான நுழைவாயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு வாயு மின்குமிழ், புகையிரத கார், புகையிரத நடைமேடை, நீராவி என்ஜின்கள், புகையிரத அதிகாரிகள் அணிந்திருக்கும் சீருடைகளில் நிலக்கரி படுதல் ஆகிய ஆரம்ப காலத்தின் புகையிரத உப கலாசாரத்தின் பெறுமதியான அனுபவத்தைப் பெறமுடியும்.
இதனால் எமது புராதன புகையிரதக் கலாசாரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டுள்ளது.
இங்கு நூதனசாலை அமைந்துள்ளது எனக் கூறுவதை விட புகையிரத நூதனசாலைக் கிராமமாக அறிமுகப்படுத்தினால் அதிக வரவேற்பைப் பெறும் என திட்டமிடல் பணிப்பாளர் நம்பிக்கை வெளியிட்டார்.
புகையிரத நூதனக் கிராமம் இரண்டு கட்டங்களில் தமது செயற்பாடுகளை ஆரம்பித்தது. 2018ஆம் ஆண்டில் அமைச்சரவைப் பத்திரத்திற்கு இணங்க பி. ஏ. டி. ஆரியரத்ன புகையிரதப் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டார்.
முதலாவது கட்டத்தில் 1800 ஆண்டு காலப் பகுதியில் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட புராதன 27 என்ஜின்கள் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் நூறு மில்லியன் ரூபா செலவில் 10 நீராவி என்ஜின்கள் திருத்தப்பட்டுக் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
நாட்டில் வெள்ளையர் காலத்தில் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட மிகவும் பெறுமதியான 42 கெரட் என்ஜின்களைப் பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வாய்ப்புக் கிடைக்கும். அத்துடன் இந்நூதனசாலைக்கு வரும் புகையிரதப் பயணிகளுக்கு ஞாபகத்திற்கு, உணவகம் மாத்திரம் இல்லாத சிறிய புகையிரதத்தில் சிறிய புகையிரத உலா மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை வழங்குவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் புகையிரதத் திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ஜே. ஏ. டி. ஆர்.புஷ்பகுமார மேலும் சுட்டிக்காட்டினார்.