19 ஆம் திகதி சிறப்பு அரசு விடுமுறை தினமாக அறிவிப்பு!
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதியை சிறப்பு அரசு விடுமுறை தினமாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
அன்றைய தினம் தேசிய துக்க நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்க விடுமுறை தடையாக இருக்கக் கூடாது என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.