பாணின் விலை 300 ரூபா?
கோதுமை மாவின் விலை அதிகரித்ததால் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
நாடளாவிய ரீதியில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு காரணமாக சந்தையில் கோதுமை மாவின் விலை வேகமாக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 350 முதல் 400 ரூபா வரையிலும், சில்லறை விலை 360 முதல் 380 ரூபா வரையிலும் உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் கோதுமை மாவின் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு பேக்கரி தொழிலை கடுமையாக பாதித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் கோதுமை மாவின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் தலையிட வேண்டுமென பேக்கரிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதேவேளை, கோதுமை மாவின் தட்டுப்பாடு தொடர்பில் ப்ரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களுடன் அமைச்சர் நளீன் பெர்னாண்டோ நேற்று கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடல் தொடர்பில் அமைச்சர் நளீன் பெர்னாண்டோவிடம் ´அத தெரண´ வினவிய போது, ப்ரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களிடம் தற்போது கைவசம் உள்ள கோதுமை மாவினை சந்தைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.