பிரபல நடிகையை திருமணம் செய்துகொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர்!
தமிழில் நட்புன்னா என்ன தெரியுமா, சுட்டக்கதை, முருகைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தனது லிப்ரா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர்.
சினிமா தயாரிப்பளராக மட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி விமர்சகராகவும் தன்னை முன்நிலைப் படுத்திகொண்டார். இவர் வனிதா விஜயகுமார் பங்கேற்ற பிக்பாஸ் சீசன் 4ல் தனது விமர்சனங்களை முன்நிறுத்தி அனைவராலும் அறியப்பட்டார்.
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி தொகுப்பாளினியும் சின்னத்திரை சீரியல் நடிகையுமான மகாலட்சுமியை திருமணம் செய்துக் கொண்டதாக சமூக வலைத்தளத்தில் ரவீந்திரன் பதிவிட்டு அதனுடன் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
அந்த பதிவில், மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லுவாங்க.. ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையா கிடச்சா.. விரைவில் என் பொண்டாட்டியுடன் ஃபேக்ட் மேன் ஃபேக்ட்ஸ் நேரலையில் உங்களை சந்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த தம்பதியினருக்கு திரைத்துறையினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
அஞ்சாத பாதுகாவலர்களை சந்திக்கவும்.. பொன்னியின் செல்வன் அப்டேட்.. மகாலட்சுமி அரசி, தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.