Breaking News

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் உடன்பாடு கைச்சாத்து!

 


இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவும் ஊழியர்கள் அளவிலான உடன்பாட்டை எட்டியுள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்கள் விரிவான நிதியுதவி வசதியை சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வசதி 48 மாதங்களுக்கு செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.