Breaking News

எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரி முச்சக்கரவண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டம்!

 


தங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரி பல தொழில்சார்ந்த முச்சக்கரவண்டி சாரதிகளின் பல சங்கங்களின் பிரதிநிதிகள் எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை ஆர்ப்பாட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

QR முறையின் கீழ் முச்சக்கரவண்டிக்கு வாராந்தம் 5 லீற்றர் பெற்றோல் வழங்கப்படுவதுடன், அது போதாது என தொழில்சார்ந்த முச்சக்கர வண்டி சாரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் எரிசக்தி அமைச்சு இதுவரையில் எரிபொருள் ஒதுக்கீட்டை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.