Breaking News

முட்டை விலையில் மாற்றம் : 46 ரூபாய்!

 


பண்ணைக்கு வரும் மொத்த வியாபாரிகளுக்கு முட்டை ஒன்றை 46 ரூபாயிற்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் முட்டை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் முட்டை விலை தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியில் திருத்தம் செய்யப்படும் வரை உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது