அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு தயாரான அஜித்..
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் "துணிவு". இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலானது.
இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக புதிய தகவல் வெளியானது.
துணிவு போஸ்டர் இந்நிலையில், நடிகர் அஜித் விமான நிலையத்தில் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, அஜித் இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து பாங்காக் செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளார்.
இவர் பாங்காகில் நடைபெறும் "துணிவு" படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு சென்றதாக கூறப்படுகிறது. மேலும், இவருடன் நடிகை மஞ்சுவாரியர் இருந்தது குறிப்பிடத்தக்கது.