ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்கப்படுமா?
எதிர்வரும் 4 நாட்களுக்குள் மீனின் விலை 50 வீதத்தால் குறைவடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெனிங் சந்தை மீன் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக மீன்களின் விலை அதிகமாக இருந்தாலும் விலை விரைவில் குறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 450 ரூபாவை எட்டினால், ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பாண் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதுடன், பாண் விற்பனையில் தொடர்ச்சியாக நட்டம் ஏற்படுவதாகவும் அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.