Breaking News

பாராளுமன்றில் சற்றுமுன் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டமூலம்!

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றில் இன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, சட்டமூலத்திற்கு ஆதரவாக 91 வாக்குகளும் சட்டமூலத்திற்கு எதிராக 10 வாக்குகளும் கிடைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, 81 வாக்குகளால் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் இன்று (08) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது..

இது தொடர்பான சட்டமூலம் நேற்றுமுன்தினம் விவாதம் இன்றி நிறைவேற்றப்படவிருந்த போதிலும், குறித்த சட்டமூலத்திற்கு விவாதம் தேவை என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இன்று விவாதம் நடைபெற்றது.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று நடைபெறவிருந்த 2022ஆம் ஆண்டுக்கான மத்திய ஆண்டு அரச நிதிநிலை அறிக்கை தொடர்பான பேரவை ஒத்திவைப்பு மீதான விவாதம் வேறொரு நாளில் நடைபெற உள்ளது.சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றில் இன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, சட்டமூலத்திற்கு ஆதரவாக 91 வாக்குகளும் சட்டமூலத்திற்கு எதிராக 10 வாக்குகளும் கிடைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, 81 வாக்குகளால் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் இன்று (08) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது..

இது தொடர்பான சட்டமூலம் நேற்றுமுன்தினம் விவாதம் இன்றி நிறைவேற்றப்படவிருந்த போதிலும், குறித்த சட்டமூலத்திற்கு விவாதம் தேவை என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இன்று விவாதம் நடைபெற்றது.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று நடைபெறவிருந்த 2022ஆம் ஆண்டுக்கான மத்திய ஆண்டு அரச நிதிநிலை அறிக்கை தொடர்பான பேரவை ஒத்திவைப்பு மீதான விவாதம் வேறொரு நாளில் நடைபெற உள்ளது.