Breaking News

புற்றுநோயை விரட்டும் முட்டைகோஸ்!

 


நம் உணவோடு சேர்த்து சாப்பிடும் முட்டைகோஸில், நிறைய நன்மைகள் இருக்கிறது. அதை தெரிந்து கொள்வோமா..! முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்கள் நிறைய உள்ளன. 

எனவே இதனை தொடர்ந்து சாப்பிட்டால், புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின்-சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். 

முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம். 

இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். முட்டைகோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து சிறந்த நிவாரணம் தரும்.