Breaking News

1.1 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை தாய்வானுக்கு வழங்க அமெரிக்கா அனுமதி!

 


சீனாவை ஆத்திரமூட்டும் வகையில் தாய்வானுக்கு 1.1 பில்லியன் டொலர் மதிப்பைலான ஆயுதங்களை வழங்குவதற்கு அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.

உள்வரும் தாக்குதல்கள் மற்றும் கப்பல் எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கண்காணிக்க ஒரு ரேடார் அமைப்பு அடங்கலாக இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும் அல்லது எதிர் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சீனா கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் வொஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகளை கடுமையாக பாதிக்கும் என்றும் அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் பிரதிநிதிகளின் வருகையைத் தொடர்ந்து, கடந்த மாதம் தாய்வானைச் சுற்றி பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகளை சீனா மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.