சர்வகட்சி அரசாங்கத்தில் இணையுமாறு அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு!
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக சர்வகட்சி அரசாங்கத்தில் இணையுமாறு அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நாடாளுமன்றில் ஆற்றிய இடைக்கால வரவு செலவுத்திட்ட உரையின்போதே ஜனாதிபதி இவ்வாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.