Breaking News

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு அவசரகால கடன்!

 


இலங்கைக்கு அவசர கடன் உதவிகளை வழங்கும் ஆரம்ப உடன்படிக்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு நாளைய தினம் (வியாழக்கிழமை) வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.

மோசமான பொருளாதார நெருக்கடியுடன் போராடும் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் டொலர்களை கோரியுள்ளது.

இந்தநிலையில் கடன் இணக்கம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள்  உடனடியாக பதிலளிக்கவில்லை என ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு வருகை தந்துள்ள, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், திறைசேரியின் செயலாளர் உட்பட இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் நேற்று நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.