Breaking News

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

 


இலங்கையில் வெகு விரைவில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான சுமார் 500 முதல் 700 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த நான்கு மாதங்களுக்கு எரிபொருட்களை கொள்வனவு செய்ய 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்ற அடிப்படையில் அதற்கான டொலர்களை தேடும் வாய்ப்புகள் அரிதாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வெளிநாட்டு நிறுவங்களில் சீனாவின் சினோபெக் குழுமம், பிரிட்டிஷ் ஷெல் நிறுவனம் மற்றும் இந்திய நிறுவனங்களின் 27 முன்மொழிவுகள் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ளதாகவும் கூறுப்படுகின்றது.

இதேவேளை அடுத்த மாதத்திற்கான டீசல், பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணெய் தேவைகளை இறக்குமதி செய்வதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்குமாறு திறைசேரி மற்றும் மத்திய வங்கியிடம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது.