Breaking News

எகிப்தில் தேவாலயம் ஒன்றில் பயங்கர தீ விபத்து - பலர் பலி!

 


எகிப்தில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சுமார் 5,000 பேர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து காரணமாக தேவாலயத்தின் பிரதான நுழைவாயிலில் மறிக்கப்பட்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.