சீனாவின் போர் மிரட்டல்: தாய்வானுக்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா முடிவு!
தாய்வானை, தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தாய்வானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.
சமீபத்தில் அமெரிக்க சபாநாயகர் தைவானுக்கு சென்றதால் ஆத்திரம் அடைந்த சீனா, தைவானை சுற்றி போர்ப் பயிற்சியில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
மேலும் சீன போர் விமானங்கள், தாய்வான் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வருகின்றன என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தாய்வானுக்கு ராணுவ ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ரூ.8,700 கோடி மதிப்பில் ஆயுதங்களை தாய்வானுக்கு விற்பனை செய்ய ஒப்புதல் வழங்க அமெரிக்க பாராளுமன்றத்தை அதிபர் ஜோபைடன் வலியுறுத்தி உள்ளார். தாய்வானுக்கு 60 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், 100 ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க அதிபர் ஜோபைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.