இந்த இடத்தை பிடிக்க கடுமையாக போராடினேன் - விக்ரம் பதிலால் நெகிழ்ந்த துருவ் விக்ரம்!
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கோப்ரா ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், கோப்ரா படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் துருவ் விக்ரம் கூறியதாவது, "என்னுடைய அப்பா கடின உழைப்பாளி என்று அனைவருக்கும் தெரியும். அவருடன் 'மகான்' படத்தில் பணியாற்றும்போது ஒரு விஷயத்தை உன்னிப்பாக கவனித்தேன். துருவ் விக்ரம் நீளமான காட்சி ஒன்றில் மும்முரமாக நடித்துக் கொண்டிருக்கும் போது ஒருகட்டத்தில் எனக்கு சோர்வு ஏற்பட்டது. ஆனால் அப்பா சோர்வே இல்லாமல் உற்சாகத்துடன் நடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவரிடம், "என்னப்பா.. எனக்கு எனர்ஜி போய்ருச்சு. ஆனால் நீங்க உற்சாகமாக இருக்கீங்க... எப்படி?" எனக் கேட்டேன். அதற்கு அவர், ''இந்த இடத்தை பெற கடுமையாக போராடியதால் இந்த உற்சாகம் தொடர்கிறது" என்று கூறினார். 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 31- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.