எரிபொருள் வழங்கும் திகதிகளில் மாற்றம்!
தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்தின் கீழ் எரிபொருள் வழங்கும் திகதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, வாகனப் பதிவு எண்ணின் கடைசி எண் (வாகன எண்ணின் கடைசி இலக்கம்) 0, 1, 2 ஆக இருந்தால் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் எரிபொருளைப் பெறலாம்.
உங்கள் வாகனத்தின் பதிவு எண்ணின் கடைசி எண் 3, 4, 5 ஆக இருந்தால், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் பெறலாம்.
உங்கள் வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கம் 6, 7, 8, 9 என இருந்தால் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் எரிபொருளைப் பெறலாம்.
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் கீழ் எரிபொருள் விடுவிப்பது சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.