எரிபொருள் விநியோகிக்கப்படும் தினம் குறித்த அறிவிப்பு!
எதிர்காலத்தில் எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் கபில நாம்புடுன்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜுலை மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருளை விநியோகிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
"எதிர்காலத்தில், இந்த அனுமதி பத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் எனவும் மேலும், ஒவ்வொரு வாகனத்தின் பதிவு எண்ணின் கடைசி எண்ணுக்கு குறிப்பிட்ட திகதி வழங்கப்படும் எனவும் அமைச்சர் எமக்கு அறிவித்தார். இந்த அனுமதிப்பத்திரத்தின் படி வாரம் இருமுறை எரிபொருள் வழங்கப்படும். வரிசையில் நிற்பதால் எந்த பலனும் கிடைக்காது என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அதன்படி தனக்கான குறிப்பிட்ட நாளில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வரவேண்டும்."
மேலும், இன்று காலை டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்ட விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர், பல வாகனங்களைக் கொண்ட வர்த்தக நிறுவனங்களுக்காக எதிர்வரும் நாட்களில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
Verification செய்த பின்னர், ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு குறிப்பிட்ட QR குறியீடு வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்று பிற்பகல் அமைச்சர் மற்றுமொரு ட்வீட்டைப் பதிவிட்டு, முன்னோடித் திட்டமாக நாடளாவிய ரீதியில் நடமாடும் எரிபொருள் விநியோகத் திட்டத்தை செயற்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி, இந்த நடமாடும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் முச்சக்கர வண்டிகள், ஜெனரேட்டர்கள், விநியோக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கேன்களுக்கான எரிபொருளை வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்பின்னர் எரிபொருளை வழங்குவதற்கான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு நேற்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
www.fuelpass.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து பதிவு செய்துக் கொள்ள முடியும்.