Breaking News

எதிர்வரும் 13ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை!

 


நாட்டில் எதிர்வரும் 13ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.

எனினும் அத்தியாவசிய அரச சேவைகளில் ஈடுபடுவோருக்கு இந்த விடுமுறை பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சிரமங்களையும் மின்சாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் அலுவலகங்களை நடத்துவதில் ஏற்படக்கூடிய சிரமங்களையும் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.