Breaking News

இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா!

 


இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றியை பதிவு செய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க அதிகபட்சமாக 39 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான கேன் ரிச்சட்சன் 4 விக்கெட்களையும் மற்றும் ஜெய் ரிச்சட்சன் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி,பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 17.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவுஸ்திரேலியா சார்பில் மெத்திவ் வேட் அதிகபட்டசமாக ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்களையும் துஷ்மந்த சமீர மற்றும் நுவன் துஷார தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

இதற்கமைய, மூன்று போட்டிகள் கொட்ட ரி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

மூன்றாவது ரி20 போட்டி கண்டி, பல்லேகெல மைதானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.