Breaking News

மீண்டும் அதிகரிக்கும் எரிவாயு விலைகள்..

 


லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை அடுத்த வாரமளவில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது .

இதேவேளை லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிக்கக்கூடும் எனவும் அந்நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 6,000 ரூபாவை விட அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது .

இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று (சனிக்கிழமை) விநியோகிக்கப்படாது என்பதோடு எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை மீள ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக Litro நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.