Breaking News

அதிகரித்தது மீனின் விலை..


 சந்தையில் மீனின் விலை வெகுவாக உயர்வடைந்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினால் இவ்வாறு மீனின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளது.

பேலியகொடை மீன் சந்தையில் தலபாத் 2,200 ரூபா, கொப்பரை 2,300 ரூபா என்ற அடிப்படையில் ஒரு கிலோ மீன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதேவேளை, சந்தையில் ஒரு கிலோ பருப்பின் விலை 650 ரூபாவைத் தாண்டியுள்ளது.

பருப்புக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் விதிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.