Breaking News

ரஷ்யாவிற்கு எதிராக போரிட இராணுவ ஆயுத உதவி அளிக்கும் அமெரிக்கா!

 


உக்ரைனின் வடக்கு பகுதி நகரங்களை கைப்பற்ற ரஷ்யா தீவிரம் காட்டி வரும் நிலையில், உக்ரைனுக்கு 700 மில்லியன் டொலர்கள் மதிப்பீட்டில் அமெரிக்கா இராணுவ ஆயுத உதவியை வழங்கவுள்ளது.

ஹிமார்ஸ் ஏவுகணை அமைப்புகள், பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், இராணுவ ஹெலிகொப்டர்கள் உள்ளிட்ட ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது.

உக்ரைனுக்கு இன்னும் மேம்பட்ட ரொக்கெட் அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இது போர்க்களத்தில் முக்கிய இலக்குகளை இன்னும் துல்லியமாக தாக்க உதவும் எனவும் அவர் கூறினார்.

அதிநவீன ஏவுகணை அமைப்புகள் உக்ரைனில் ரஷ்யாவின் முன்னேற்றங்களை தடுக்க பயன்படுத்தப்படுமே தவிர, ரஷியாவுக்குள் தாக்க ஏவுகணைகளை பயன்படுத்த மாட்டோம் என்று உக்ரைன் உறுதி அளித்துள்ளது.