21 ஆவது திருத்தம் தொடர்பான இறுதி கலந்துரையாடல் இன்று...
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் இன்று (03) கலந்துரையாடப்படவுள்ளது.
அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடன் இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்று விளக்கமளிக்கப்படவுள்ளது.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் காலை 10.00 மணிக்கு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இது தொடர்பில் விளக்கமளிக்க உள்ளார்.