பொதுப் போக்குவரத்து சேவை தொடர்பில் விசேட வேலைத்திட்டம்!
பொதுப் போக்குவரத்து சேவையை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்காக அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, போக்குவரத்துக் கட்டணங்களின் பாரிய அதிகரிப்பு மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பல விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இத்திட்டம் ஜூன் 15ம் திகதி முதல் அமல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கொழும்புக்கான பல அணுகு வீதிகளில் அன்றைய தினம் முதல் 20 புதிய பாடசாலை பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளன.
பார்க் & டிரைவ் திட்டம் தொடர்பிலும் வெகுஜன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.