சிவகார்த்திகேயன் படத்தின் புதிய அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
தமிழில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'டான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபீஸில் வசூலில் சாதனை படைத்தது. இதையடுத்து, சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்து வரும் படம் 'எஸ்.கே.20'. இப்படத்தை தெலுங்கில் வெளியான 'ஜாதி ரத்னாலு' படத்தின் இயக்குனர் அனுதீப் கேவி இயக்குகிறார். இப்படத்தில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
எஸ்கே20 தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று 'எஸ்.கே.20' திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுனர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், 'எஸ்.கே.20' படத்தின் புதிய அப்டேட் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.