சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு -144 குடும்பங்கள் பாதிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் இரத்தினபுரி- கிரியெல்ல பிரதேசத்தில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் சீரற்ற காலநிலையினால் 6 மாவட்டங்களில் 144 குடும்பங்களைச் சேர்ந்த 576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, 236 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கடற்படையினர் 13 நிவாரண குழுக்களை களமிறக்கியுள்ளனர்.
குறித்த நிவாரணக் குழுக்கள் இன்று முதல் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் ஈடுபடுத்தப்படும் என கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.