அரசாங்கத்திற்கு மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் ஐக்கிய மக்கள் சக்தி கையளித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (03) பிற்பகல் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளித்துள்ளனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
“இன்று ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் எதிராக இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை கையளித்தோம். நாளை மறுநாள் முதல் இது குறித்து விரைவில் விவாதம் நடத்த சபாநாயகர் உடனடி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். மேலும், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் விதத்தை வைத்து அவர்கள் எந்தப் பக்கம் சார்ந்தவர்கள் என்பதைச் அறியமுடியும். “துன்பப்படும் மக்களின் பக்கமா? அல்லது நாட்டை அழிக்கும் அரசின் பக்கமா?” என்பது தொடர்பில்.
அரசு மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைகள் கையளிப்பு!
Reviewed by Thamil
on
5/03/2022
Rating: 5