Breaking News

சற்றுமுன் ஆரம்பமான இம்மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு!

 


மே மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை சற்றுமுன்  பாராளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இன்றைய தினம் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.

இன்று பிற்பகல் இந்த கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் நாட்களின் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.