பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான மக்கள் பேரணி திருகோணமலையில் ஆரம்பம்!
இன விடுதலையை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான மக்கள் பேரணி ஒன்று கடந்த 15ஆம் திகதி பொத்துவிலில் இருந்து ஆரம்பமாகி நேற்று (திங்கட்கிழமை) திருகோணமலையை வந்தடைந்தது.
அதனைந்தொடர்ந்து இன்றைய தினம் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்த குறித்த பேரணி திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது
குறித்த பேரணி திருகோணமலையிலிருந்து ஆரம்பமாகி நிலாவெளி,குச்சவெளி, புல்மோட்டை ஊடாக தென்னமரவாடியை சென்றடைந்து அங்கிருந்து வவுனியா ஊடாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.
அத்துடன் போரணியின் ஆரம்பத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் அனைவருக்கும் பகிரப்பட்டதுடன் இது இறுதி யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உணவாக உற்கொண்ட கஞ்சியை நினைவு படுத்தும் முகமாக குறித்த செயற்பாடானது முன்மெடுக்கப்பட்டது விசேட அம்சமாகும்.
குறித்த மக்கள் பேரணியில் மதகுருமார்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.