அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!
சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டால் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் முன்னறிவிப்பின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் கலாநிதி சமில் விஜேசிங்க இதனை தெரிவித்தார்.
சுகாதார அமைச்சகத்தில் உள்ள ஒரு சில அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் சுகாதார ஊழியர்களுக்கான சம்பளம் குறைப்புக்கு தயாராகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே அவ்வாறான சம்பள குறைப்புக்கள் மேற்கொள்ளப்படுமாயின் எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதிக்கு பின்னர் எவ்வித முன்னறிவிப்புமின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
அதுவரை சுகாதார அமைச்சுக்கு கால அவகாசம் அளித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.