Breaking News

நாடாளுமன்றம் அருகே போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்..

 


நாடாளுமன்றம் அருகே போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

மாணவர்கள் பொலிஸாரின் வீதித் தடையினை மீறி நாடாளுமன்ற வளாகத்திற்கு செல்ல முற்பட்ட போது பொலிஸாரினால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

நாடாளுமன்ற வளாகத்தினை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘ஹொரா கோ கம’ என அந்த இடத்திற்கு பெயரிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.