ஆண்கள் குறித்து கருத்து தெரிவித்த ஓவியா!
நடிகை ஓவியா நடித்த படங்கள் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகிறது. அவரது முழு கவனமும் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்தான் இருக்கிறது. இதற்கு தனியாக பெரிய தொகை சம்பளமாக பெறுகிறாராம் ஓவியா. சில மாதங்களுக்கு முன்பு டுவிட்டர் மூலம் தனது மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வந்தார். இதனால் அவருக்கு பெரிய ஆதரவு இருந்து வந்தது.
இந்த நிலையில் கல்லூரி விழா ஒன்றில் ஓவியா பேசியது பரபரப்பாகி வருகிறது. அவர் கூறியதாவது:- கலாச்சாரம் என்ற பெயரில் எதையும் மறைக்க வேண்டாம். ஓபனாக அனைத்தையும் பேச வேண்டும். அப்போது தான் தீர்வு கிடைக்கும். ஆண் பிள்ளைகளிடம் பெண் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். சிறுவயதிலேயே அவ்வாறு வளர்த்தால் எந்தவிதமான குற்ற செயல்பாடுகளிலும் ஆண் பிள்ளைகள் ஈடுபட மாட்டார்கள் என்று அவர் பேசினார். ஓவியா பேசிய இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.