Breaking News

உடல் எடையை மிக வேகமாக குறைக்கும் பெருஞ்சீரக தண்ணீர்..

 


வாய் புத்துணர்ச்சியாக இருப்பதற்கு அடிக்கடி பலரும் வாயில் போட்டு மெல்லும் பெருஞ்சீரகம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. பெருஞ்சீரகத்தை உணவு உண்ட பிறகு வாயில் போட்டு மெல்லும் பொழுது அது வாய்க்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. மேலும் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. சமையலில் இறைச்சி போன்ற பல உணவுகளுக்கு அதிக சுவையை கொடுக்கக்கூடியது பெருஞ்சீரகம்.

இந்தப் பெருஞ்சீரகத்தை தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது உடல் எடை குறையவும் உதவிசெய்கிறது. உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் நீங்கள் உடல் எடையை குறைக்க பெருஞ்சீரகத்தை பயன்படுத்தலாம். பெருஞ்சீரக விதைகளை வெந்நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை குடிக்கலாம். அதுபோல குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் தொடர்ந்து குடித்து வரும் பொழுது உங்களுடைய உடல் எடையை குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது.

பெருஞ்சீரக விதைகள் நம்முடைய உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்டது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் திறன் கொண்ட ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகிறது. பெருஞ்சீரக தண்ணீரை நீங்கள் தொடர்ந்து குடித்து வரும் பொழுது அது மெலடோனின் உற்பத்தியை தூண்ட உதவுகிறது. மூளையில் உள்ள மெலடோனின் அளவுகள் நம்முடைய தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது. நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.

நம்முடைய உடல் எடையை குறைக்கவும் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும் நல்ல தூக்கம் ஒரு சிறந்த வழிமுறை என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பெருஞ்சீரக தண்ணீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றம் என்பது உணவுகளிலிருந்து நாம் பெறக்கூடிய ஆற்றலை நமது செல்கள் பயன்படுத்தும் செயல்முறை. இந்த செயல்முறையை அதிகரிப்பதன் மூலமாக நாம் சாப்பிடக்கூடிய கலோரிகள் நம்முடைய உயிரணுக்களால் விரைவாக பயன்படுத்தப்படுகிறது.


மாலைமலர்