21வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது - ரணில் விக்கிரமசிங்க!
21வது அரசியலமைப்பு சீர்திருத்தம் உருவாக்கப்பட்டாலும், நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று கொழும்பில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தின் போதே முன்னாள் பிரதமர் ரணில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வேலையை இழந்துள்ளனர். டொலர் தட்டுப்பாடு மற்றும் மோசமான நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக அரசாங்கம் ஸ்திரமற்ற நிலைக்குச் சென்றுள்ளதாகவும், இதனால் மக்களின் அன்றாட வாழ்வில் எரிவாயு, உணவு, எரிபொருள் மற்றும் மின்சாரம் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கூற்றுப்படி, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு பதிலாக 21 வது அரசியலமைப்பு உருவாக்கப்பட்டாலும், எந்த மாற்றமும் ஏற்படாது என குறிப்பிட்டுள்ளார்.
20ஆவது திருத்தச் சட்டத்தில் தமக்கு விருப்பம் இல்லை எனவும், 21ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவது கடினம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.