Breaking News

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு அமுலாகும் விதம் குறித்த அறிவிப்பு!

 


நாட்டில் நாளை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மூன்று மணித்தியாலங்களும் நாற்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபையின் கோரிக்கையை அடுத்து மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய A முதல் W வரையான 20 பிரிவுகளில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு முன்னுரிமை வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், M N O X Y Z ஆகிய வலயங்களில் காலை 5 மணி முதல் 8 மணி வரை 3 மணித்தியால மின் வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.